Write Tamil Language in Your Computer:இன்றும் கணிணியில் தமிழில் எழுதுவதற்கு பலர் மிகவும் சிரமபடுகின்றனர். நாம் இந்த பகுதியில் Windows 7 மற்றும் Windows 8 இயங்குதளங்களில் மிகவும் சுலபமாக தமிழில் எழுதுவது எப்படி என்பதை பார்ப்போம்.
NHM Writer என்பதுதான் நாம் பயன்படுத்த போகும் மென்பொருள் (Software) ஆகும். NHM Writer என்ற மென்பொருள் Tamil, Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi & Telugu போன்ற 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு ( Typing )செய்ய உதவுகிறது.
Download NHM Writer:
NHM Writer மென்பொருளை ( Software ) கீழே உள்ள Link-யை கிளிக் செய்வதன் மூலம் பதிவிறக்கம் ( Download ) செய்யலாம்.
Download NHM Writer Tamil Writer Software for Windows 7 and Windows 8.
Using NHM Writer:
- NHM Writer-யை Install செய்த பிறகு அதனை open செய்து கொள்ளவும்.NHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar ரில் வலது மூலையில் மணி ( Bell) போன்ற
ஓர் குறியீடு (Icon) தெரிந்தால் NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம். இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும்.
- இந்த ஐந்து முறைகளில் "Tamil Phonetic Unicode" அதாவது இரண்டாவது முறையானது மிகவும் எளிதாக இருக்கும். இந்த முறையில் “Amma" என்று type செய்தால் “அம்மா” என்று பதிவாகும்.
- Shortcut: மேலும் எளிதாக தமிழில் தட்டச்சு தேர்வு, செய்ய Alt Key மற்றும் 1/2/3/4 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.தமிழ் தட்டச்சுவிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key மற்றும் 0 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.
- செட்டிங்கை எவ்வாறு மாற்றுவது: NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
- அதில் On-Screen Keyboard என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும். நீங்கள் இதை வைத்து தட்டச்சு செய்யும் எழுத்து எங்கு உள்ளது என்பதை எளிதில் பார்த்து தட்டச்சு செய்ய முடியும்.

0 comments:
Post a Comment