Tuesday, 24 June 2014

கேஸ் காலியாவதை உணர்த்தும் மாநாகராட்சி பள்ளி மாணவனின் புதிய கண்டுபிடிப்பு!

கேஸ் சிலிண்டர் எப்ப முடிய போதுன்னு தெரியலயே என பல இல்லதரசிகள் குழும்பி போவார்கள்.. தீடிர் என கேஸ் காலியாகிவிடும்.. பிறகு சமைப்பதை விட்டு விட்டு கேசை தேடி அழைய வேண்டும்..


கேஸ் காலியாவதை முன்னரே தெரிவிக்கும் கருவி ஒன்றை மாநகராட்சி பள்ளி மாணவன் ஒரு கண்டுபிடித்துள்ளான்..
காஸ் சிலிண்டரில் எரிபொருள் குறைவதை ஒலி எழுப்பி உணர்த்தும் கருவியை, அரசு பள்ளி மாணவர் கண்டுபிடித்துள்ளார்.கோவை மாவட்டம், பேரூர், மாதம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர், சந்துரு. இவர், பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், காஸ் சிலிண்டரில் எரிபொருள் குறைவதை, ஒலி எழுப்பி உணர்த்தும் கருவியை கண்டறிந்துள்ளார்.கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்த, இவரது படைப்பை, பள்ளி தலைமையாசிரியர் சுகந்தி, சக ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.


மாணவர் சந்துரு கூறியதாவது:காஸ் சிலிண்டர் காலியாவதை முன்பே தெரிந்து கொண்டால், “புக்கிங்’ செய்து காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதைக் கருத்தில் கொண்டு, கண்டுபிடிப்பை உருவாக்கினேன். எடை பார்க்கும் தராசில், சுழலும் தகட்டில் ஒரு தகடு இணைக்கப்பட்டுள்ளது.காஸ் சிலிண்டரை வைக்கும் போது, அதிக எடையின் காரணமாக, சுழலும் தட்டு, இடதுபுறமாக சுழலும். சிலிண்டரில் காஸ், குறைய குறைய, வலது புறமாக சுழல ஆரம்பிக்கும். சிலிண்டரிலுள்ள கேஸ் தீரும் நிலைக்கு சற்று முன், தராசில் இணைக்கப்பட்டுள்ள ஒலி எழுப்பும் கருவி, ஒலியை எழுப்ப துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


Please Share this post for OUR INDIAN STUDENT.



0 comments:

Post a Comment